
என் அன்பின் ஆருயிரே அம்மா!
நீ பெற்ற குழந்தை நான்,
பத்து மாதம் கருவறை வாசம்
பின் பாசம் ஊறும்
பால் மணம் வீசும்
அழுகை வந்தால்
முத்தமிட்டு சிரிப்பாட்டுவாய்
மார்போடு அணைப்பாய்
ஆனந்தம் பொங்கும்
நீ தாலாட்டு பாடினால்
தென்றலாய் உறக்கம் வரும்
உன் முக அழகு கண்டு
உன் மடியில் உறங்குவேன்
கதைகள் சொல்லி பேசப் பழக்குவாய்
நிலாச்சோறு ஊட்டி நடை பழக்குவாய்
நினைவு தெரியாத நாள் முதலே
என்னுயிர் நீதானே! என் அன்புத் தாயே!
எனக்கு வயதாகிப் போனாலும்
என் அம்மாவிற்கு நான் குழந்தை தானே!
(நன்றி: http://kalavani.blogspot.com/)
2 comments:
:)
அடடா இந்த வித்யா கலைவாணி அக்காவே களவாண்டுதான் போஸ்ட் போடுவாங்க அவங்ககிட்ட இருந்தேவா!?!?
Post a Comment