Wednesday, June 4, 2008

எங்க Family பாட்டு!

இந்த பாட்டுதாங்க எங்க family song.

என்ன அழுகை வந்தாலும் இந்த பாட்ட போட்டா, நான் silent ஆயிடுவேன். நீங்களும் கேளுங்க!

நல்ல பாட்டு இல்ல?

ஓரம்போ! தூரம் போ!!

ஓரம்போ! தூரம் போ!!
என்னோட First வண்டி!

குட்டி பாப்பா வண்டி வருது...பார்த்து போ!

இனிமேல் speedlimit தாண்டி ஒட்ட மாட்டேன். இந்த ஒரு தடவை மண்ணிச்சிடுங்க!

Car இல்லைன்னா என்ன, Bike இருக்கே!!!!

திரை கடல் ஓடி திரவியம் தேட கிளம்பிட்டாரு!

என் அப்பா திரை கடல் ஓடி திரவியம் தேட கிளம்பிட்டாரு!

அப்பா குட்டி பாப்பாவ விட்டு Finalnd போயிருக்காரு, கூடிய சீக்கிரம் பாப்பாவையும் அம்மாவையும் கூட்டிட்டு போவாரு.

குட்டி பாப்பா இப்போ Airportல இருக்கேன்.


இது அப்பாவுக்கு நான் கொடுத்த card.


அப்பா, அழாம பத்ரமா போய்ட்டு வாங்க.
என்னை ரெண்டு பாட்டியும் பார்த்துக்குவாங்க
அப்பா எல்லாம் எடுத்துக்கிட்டாரா?




பேர் சொல்லும் பிள்ளை!

பாருனி மித்ரா...
என்னோட அப்பாவும் அம்மாவும் ரொம்ப நாளா உட்கார்ந்து யோசிச்சி வெச்ச பேரு.
பாருனி அப்படின்னா துர்கா தேவி அப்படின்னு அர்த்தம்...
மித்ரா அப்படின்னா சிநேகிதி அப்படின்னு அர்த்தம்.
அப்போ பாருனி மித்ரா அப்படின்னா துர்கையின் சிநேகிதி அப்படின்னு அர்த்தம்.
ரொம்ப யோசிச்சிருக்காங்கள்ள?
நீங்க என்ன நினைகிறீங்க அப்படிங்கிறதை சொல்லிட்டு போங்க!

Monday, June 2, 2008

என் அம்மாவிற்கு நான் குழந்தை தானே!

இந்த கவிதை என் அப்பா http://kalavani.blogspot.com/ல இருந்து சுட்டது


என் அன்பின் ஆருயிரே அம்மா!

நீ பெற்ற குழந்தை நான்,

பத்து மாதம் கருவறை வாசம்

பின் பாசம் ஊறும்

பால் மணம் வீசும்

அழுகை வந்தால்

முத்தமிட்டு சிரிப்பாட்டுவாய்

மார்போடு அணைப்பாய்

ஆனந்தம் பொங்கும்

நீ தாலாட்டு பாடினால்

தென்றலாய் உறக்கம் வரும்

உன் முக அழகு கண்டு

உன் மடியில் உறங்குவேன்

கதைகள் சொல்லி பேசப் பழக்குவாய்

நிலாச்சோறு ஊட்டி நடை பழக்குவாய்

நினைவு தெரியாத நாள் முதலே

என்னுயிர் நீதானே! என் அன்புத் தாயே!

எனக்கு வயதாகிப் போனாலும்

என் அம்மாவிற்கு நான் குழந்தை தானே!



முதல் வீடியோ!

என்னோட அப்பா என்னை எடுத்த முதல் வீடியோ

யார்ரா அது தூங்கும் போது எடுத்தது!


எவ்வளவு லூசா டிரஸ் போட்டு விட்டு இருக்காங்க பாருங்க!பொறந்த உடனே எல்லாம் போட்டுக்க முடியுமா?



தூங்க கூட விடமாட்டேன்கிறாங்க...என்ன உலகம்டா இது!

பொறந்துடோம்ல ....பொறந்துடோம்ல....


குட்டி பாப்பா பொறந்தது டிசம்பர் மாசம் 11 ஆம் தேதி.
இந்த photo நான் பொறந்து கொஞ்ச நேரம் கழிச்சி எடுத்தது...


எப்படி பொறக்கும் போதே அழகா இருக்கேனா?